மானாமதுரை:மானாமதுரை அருகே தீயனுாரில் உறவினர் இல்ல நிச்சயதார்த்தத்திற்காக டூவீலரில் சென்ற கணவன், மனைவி கார் மோதி பலியாயினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மிளகனூரைச் சேர்ந்தவர் ராஜாமணி, 60. இவரது மனைவி கஸ்தூரி,54. இருவரும் உறவினர் இல்ல நிச்சயதார்த்தத்திற்காக நேற்று காலை தீயனுாருக்கு டூவீலரில் 'ெஹல்மெட்' அணியாமல் மதுரை- - -ராமேஸ்வரம் 4 வழிச்சாலையில் சென்றனர். காலை 10:00 மணிக்கு தீயனூர் விலக்கு அருகே பின்னால் மதுரையிலிருந்து ராமநாதபுரம் சென்ற கார் மோதி கணவன், மனைவி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாயினர். கார் டிரைவர் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே கழனிக்குடியைச் சேர்ந்த தினேஷ்குமாரை, மானாமதுரை போலீசார் கைது செய்தனர்.