தென்காசி:வாசுதேவநல்லுாரில் நில பிரச்னையில், பழிக்கு பழியாக ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுார் தேவவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் அய்யப்பன், 55. செல்லத்துரை, 53. இருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்தது. நேற்று மாலையில் செல்லத்துரையின் வீட்டின் அருகே சென்ற போது அய்யப்பன் எச்சில் துப்பினார்.
ஆத்திரமுற்ற செல்லத்துரை, கத்தியால் அய்யப்பனை குத்திக்கொலை செய்தார். அப்போது வீட்டில் இருந்த அய்யப்பனின், 17 வயது மகன், தந்தையை கொலை செய்த செல்லத்துரையை கத்தியால் குத்தினார். இதில் செல்லத்துரை இறந்தார்.
சம்பவ இடத்தில் எஸ்.பி., சாம்சன் விசாரணை மேற்கொண்டார். கொலை தொடர்பாக சிறுவன் கைது செய்யப்பட்டார்.