காரைக்குடி அழகப்பா பல்கலையில் ஜன.22 ல் பட்டமளிப்பு விழா கவர்னர் பங்கேற்கிறார்| The governor will participate in the convocation ceremony on January 22 at Karaikudi Alagappa University | Dinamalar

காரைக்குடி அழகப்பா பல்கலையில் ஜன.22 ல் பட்டமளிப்பு விழா கவர்னர் பங்கேற்கிறார்

Added : ஜன 19, 2023 | |
காரைக்குடி:காரைக்குடி அழகப்பா பல்கலையில் 33 வது பட்டமளிப்பு விழா ஜன. 22 ல் நடக்கிறது. 700 முனைவர் பட்டம் உட்பட 1200 பேருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்குகிறார்.கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 3 ஆண்டாக இப்பல்கலையில் படித்த மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கவில்லை. இந்நிலையில் கொரோனா தடையில் தளர்வு அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பிய நிலையில் விடுபட்ட பட்டதாரிகளுக்கு ஜன. 22

காரைக்குடி:காரைக்குடி அழகப்பா பல்கலையில் 33 வது பட்டமளிப்பு விழா ஜன. 22 ல் நடக்கிறது.

700 முனைவர் பட்டம் உட்பட 1200 பேருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்குகிறார்.கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 3 ஆண்டாக இப்பல்கலையில் படித்த மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கவில்லை.

இந்நிலையில் கொரோனா தடையில் தளர்வு அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பிய நிலையில் விடுபட்ட பட்டதாரிகளுக்கு ஜன. 22 காலை 10:30 மணிக்கு பட்டமளிப்பு விழா நடக்கிறது. கவர்னர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகிறார். தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி முன்னிலை வகிக்கிறார். துணைவேந்தர் ஜி.ரவி வரவேற்று பல்கலை வளர்ச்சி திட்டங்கள் குறித்து விளக்குகிறார்.

பல்கலை பதிவாளர் எஸ்.ராஜாமோகன் தலைமையில் துறை தலைவர்கள்,பேராசிரியர்கள் விழா ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X