பழநி:பழநியில் தடை செய்யப்பட்ட 'பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா' அமைப்பில் நிர்வாகிகளாக இருந்தவர்களிடம் 3ம் நாளாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இந்த அமைப்பின் மதுரை மண்டல தலைவராக செயல்பட்ட பழநி திருநகரை சேர்ந்த முகமது கைசரிடம் 50, ஜன.16 காலையில் என்.ஐ.ஏ.,(தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் பழநி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தனர். ஜன.17ல் சண்முக நதி அருகே உள்ள தக்வா பள்ளிவாசல், ஈத்கா மைதானம் பகுதியில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அமைப்பில் மாவட்ட செயலாளராக இருந்த பழநியை சேர்ந்த சதாம் உசேனிடமும் 35, விசாரித்தனர். இவ்விசாரணை மூன்றாம் நாளாக நேற்றும் நீடித்தது. இவர்களுடன் மேலும் சிலரையும் விசாரித்தனர்.