துாத்துக்குடி:துாத்துக்குடியில் அஜித் படம் பார்க்க தியேட்டரில் அனுமதிக்கப்படாத ரசிகர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
துாத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் வீரபாகு 47. ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு மனைவி குழந்தைகளுடன் போல்டன்புரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் நடிகர் அஜித்தின் துணிவு படம் பார்க்க சென்றிருந்தார்.
இவர் மது அருந்தி இருந்ததால் அவரை தியேட்டருக்குள் அனுமதிக்கவில்லை. எனவே மனைவி, மகன், மகளை தியேட்டருக்குள் அனுப்பி வைத்தவர் மனமுடைந்து நிலையில் வீட்டுக்கு வந்து துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். துாத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரித்தனர்.