தூத்துக்குடி:தூத்துக்குடி பாத்திமாநகர் ஜெரி மகன் ஜெனிஸ்டோ 19. சென்னையில் கலைக்கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்தார்.
விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தவர் நேற்று முன்தினம் மாலையில் புதிய துறைமுகம் உப்பாற்று ஓடையில் நண்பர்களுடன் படகு சவாரியில் ஈடுபட்டார். படகில் இருந்து தவறி விழுந்தவர் கடலில் மூழ்கி பலியானார். நேற்று காலை அவரது உடல் மீட்கப்பட்டது. தெர்மல்நகர் போலீசார் விசாரித்தனர்.