இப்போதெல்லாம், சாண எரிவாயு பற்றி பேச்சே காணோமே என்று நினைக்கிறீர்களா? டிராக்டர்களை தயாரிக்கும் நியூ ஹாலாண்ட், அண்மையில், திரவமாக்கப்பட்ட சாண எரிவாயுவில் ஓடும் உலகின் முதல் டிராக்டரை உருவாக்கியிருக்கிறது.
'டி7 மீத்தேன் பவர் எல்.என்.ஜி' என்ற அந்த பசுமை டிராக்டருக்கான எரிபொருளை, விவசாயியே தயாரித்துக் கொள்ள முடியும்.
மாடுகளின் சாணத்தை தொட்டியில் கொட்டி, மீத்தேன் வாயுவை எடுத்து, அதை திரவமாக்கி சேமித்து வைத்தால், இலவசமாகவே உழுதல், விதைத்தல், அறுவடை, விற்பனை என்று சகலத்தையும் நியூ ஹாலண்டின் டிராக்டர்கள் செய்து கொடுக்கும் என்கிறது அந்த நிறுவனம்.
உலகெங்கும் பல லட்சம் டிராக்டர்கள் டீசல் புகை கக்குகின்றன. அவற்றுக்கு டாட்டா சொல்ல நேரம் வந்துவிட்டது.