அமெரிக்க மாகாண கவர்னரான முதல் இந்திய பெண்
அமெரிக்க மாகாண கவர்னரான முதல் இந்திய பெண்

அமெரிக்க மாகாண கவர்னரான முதல் இந்திய பெண்

Updated : ஜன 19, 2023 | Added : ஜன 19, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாண துணைநிலை கவர்னராக இந்தியாவில் பிறந்த அருணா மில்லர் என்பவர் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பொறுப்பேற்று கொண்டார். இந்த மாகாணத்தின் கவர்னராக பதவியேற்று கொண்ட முதல் பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பிறந்தவர் அருணா மில்லர். பொறியாளரான இவரது தந்தை ஐபிஎம் நிறுவனத்தில் பணிபுரிந்ததாக
Hyderabad-born Aruna Miller Sworn-in as Marylands First Indian American Lieutenant Governorஅமெரிக்க மாகாண கவர்னரான முதல் இந்திய பெண்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாண துணைநிலை கவர்னராக இந்தியாவில் பிறந்த அருணா மில்லர் என்பவர் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பொறுப்பேற்று கொண்டார். இந்த மாகாணத்தின் கவர்னராக பதவியேற்று கொண்ட முதல் பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.


தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பிறந்தவர் அருணா மில்லர். பொறியாளரான இவரது தந்தை ஐபிஎம் நிறுவனத்தில் பணிபுரிந்ததாக தெரிகிறது. அருணா 7 வயதாக இருக்கும் போது, தந்தையின் பணிநிமித்தம் காரணமாக பெற்றோருடன் சென்று அமெரிக்காவில் குடியேறினார்.


latest tamil news

கடந்த நவம்பர் மாதம் மேரிலாண்ட் மாகாண துணை நிலை கவர்னருக்கு பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து நேற்று( ஜன.,18) அருணா மில்லர், பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்று கொண்டார்.


latest tamil news


மேரிலாண்ட் மாகாணத்தின் துணை நிலை கவர்னரான முதல் இந்தியர், முதல் பெண், முதல் கறுப்பினத்தவர் ஆகிய பெருமையும் அருணாவுக்கு கிடைத்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

MARUTHU PANDIAR - chennai,இந்தியா
19-ஜன-202320:02:42 IST Report Abuse
MARUTHU PANDIAR ஆம் ,,வாழ்க அந்த கவர்னர்++++ஆனால் அவர் ஒரு அமெரிக்கர் தான்,,,பகவத் கீதையை மதிக்கும் ஒரு அமெரிக்கர்++++இந்திய சார்போ, ஆதரவோ ஸ்பெஷலாக எதிர்பார்க்க வேண்டாம்.
Rate this:
Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா
19-ஜன-202321:32:51 IST Report Abuse
Sathyasekaren Sathyanarayananaமுதலில் இந்தியாவில் பிறந்து இங்கே உண்டு வாழும் அந்நிய மதத்தினரை இந்தியாவிற்கு, இந்துக்களுக்கு எதிரான மனப்பான்மையை மாற்ற சொல்லுங்கள் பிறகு வெளிநாட்டு இந்துவை பற்றி பேசலாம்....
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
19-ஜன-202318:51:30 IST Report Abuse
sankaranarayanan சனாதன தர்மத்தை அழிக்க நினைப்பவரவர்கள் அண்டைமாநிலத்திலிருந்து குடியேறிய கோடாலிகள் ஒன்று அண்டை மாநிலம் ஆந்திராவிலிருந்து குடியேறிய கோடாலிகள். மற்றொன்று கர்நாடகம்
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
19-ஜன-202317:07:19 IST Report Abuse
Nellai tamilan உண்மையான தெலுங்கர்கள் அழகான சனாதன வழியில் செல்கிறார்கள் ஓங்கோல் வழியில் வந்த திருட்டு திராவிடியா கூட்டம் மட்டுமே பாவ வழியில் செல்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X