திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், 2023 - 24ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற் பள்ளி துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், புதிய தொழிற் பிரிவுகள் துவங்க விண்ணப்பம், 2ம் தேதி முதல் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பத்தை, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக, பிப்., 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பம் மற்றும் ஆய்வு கட்டணத்தை 'ஆர்.டி.ஜி.எஸ்., நெப்ட்' வாயிலாக செலுத்த வேண்டும்.
கூடுதல் தகவல் பெற, அதே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.