கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
திருத்தணி - நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில், 75க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள், தங்கள் அத்தியாவசியப் பணிகள் காரணமாக திருத்தணிக்கு வர வேண்டும். அதே போல பள்ளி மாணவர்கள் மேல்நிலைக் கல்வி மற்றும் கல்லுாரி கல்வி கற்பதற்கு திருத்தணி நகருக்கு வந்து செல்கின்றனர்.
இந்த வழித்தடங்களில், Zரிரு பேருந்துகள் மட்டும் இயங்குகின்றன. காலை, மாலை நேரத்தில் இயக்கப்படாததால், மாணவர்கள், பொதுமக்கள் வெகு நேரம் காத்திருந்து ஒரே பேருந்தில் ஏறி ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
மேலும், இரவு நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே, கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும்.
- -எம்.பிரவீன்குமார், கோதண்டராமபுரம்.