திருவாலங்காடு:கனகம்மாசத்திரம் -- பேரம்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இந்த வாகனங்களின் வேகம் குறைக்கவும், விபத்துகளை தடுக்கவும், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பள்ளி போன்ற இடங்களில், நெடுஞ்சாலைத் துறையினர் வேகத்தடை அமைத்துள்ளனர்.
இந்த சாலையில் திருவாலங்காடு ரயில் நிலையம் அடுத்த, ஓரத்துார் பகுதியில் இருந்து, காலனி வரை 5க்கும் மேற்பட்ட இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினர் வேகத்தடை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆனால், வெள்ளை வண்ணம் பூசப்படாததால், வேகத்தடை இருப்பது தெரியாமல், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வந்தனர்.
இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினரால் வேகத்தடைக்கு வண்ணம் பூசப்பட்டுள்ளது.