கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திற்கு உட்பட்ட 21வது குறுக்கு சாலை வளையும் இடத்தின் அருகே கால்வாய் உள்ளது.
இடையே தடுப்பு ஏதும் இல்லாததால், இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் தவறி விழும் ஆபத்தான நிலை இருந்தது.
இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் நிர்வாகம், ஆபத்தாக உள்ள அந்த வளைவில், கால்வாயை மூடியதுடன், சாலையோர இரும்பு தடுப்பு அமைத்தது.