மின் கம்பத்தில் ஆபத்தான ஒயர்கள்

Added : ஜன 19, 2023 | |
Advertisement
காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் லிங்கப்பன் தெரு மற்றும் ஏகாம்பரநாதர் கோவில் மேற்கு மாட வீதி வழியாக ஏகாம்பரநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் மற்றும் சாலை தெரு, சர்வதீர்த்தம், பஞ்சுபேட்டை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோரும் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் அதிகம் உள்ள லிங்கப்பன் தெருவில், இரவு நேரத்தில் வெளிச்சம் தரும்
 மின் கம்பத்தில் ஆபத்தான ஒயர்கள்

காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் லிங்கப்பன் தெரு மற்றும் ஏகாம்பரநாதர் கோவில் மேற்கு மாட வீதி வழியாக ஏகாம்பரநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் மற்றும் சாலை தெரு, சர்வதீர்த்தம், பஞ்சுபேட்டை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோரும் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.

வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் அதிகம் உள்ள லிங்கப்பன் தெருவில், இரவு நேரத்தில் வெளிச்சம் தரும் வகையில், மாநகராட்சி சார்பில், தெரு மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், ஏகாம்பரநாதர் மேற்குமாட வீதி மற்றும் லிங்கப்பன் தெருவில் உள்ள மூன்றுக்கும் மேற்பட்ட தெரு மின் விளக்கு கம்பங்களில், மின் விளக்கை இயக்குவதற்காக கம்பத்தின் கீழ்ப் பகுதியில் உள்ள மின் பெட்டி திறந்த நிலையிலும், அதில் உள்ள 'ஒயர்'கள் வெளியில் தெரியும் படியும், ஒயர்களுக்கு ஒட்டுபோடப்பட்ட இடத்தில், முறையாக 'டேப்' ஒட்டி மூடப்படாமலும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இதனால், அவ்வழியே செல்லும் பக்தர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

அவ்வழியாக சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக திறந்து கிடக்கும் ஒயரை தொட்டால் விபரீதம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, மின் கம்பங்களில் வெளியில் தெரியும்படி உள்ள ஒயர்களை மின் கம்பத்தின் உட்புறத்தில் அமைக்கவும், திறந்து கிடக்கும் மின் பெட்டியை பாதுகாப்புடன் மூடி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X