காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட வட்டாரப் போக்குவரத்துத் துறை சார்பில் கடந்த 11ம் தேதி சாலை பாதுகாப்பு வாரவிழா துவங்கியது. இதில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் பலர் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இந்நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியில் சென்னை -- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டிசத்திரம் அருகில், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுவது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர் செல்வம் ஆலோசனை வழங்கினார்.
மேலும் சாலை விதிகள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்தார். வாகனங்கள் இடது புறமாக செல்வதால் ஏற்படும் பயன் குறித்து வாகன ஓட்டுனர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகள் அப்பகுதி பொதுமக்கள் பாலுசெட்டிசத்திரம் போலீசார் பங்கேற்றனர்.