காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி செவிலிமேடு அங்கன்வாடி மையத்தில், காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர். சுப்பிரமணியன், காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி நேற்று ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, சிங்காடி வாக்கம் ஊராட்சியில், 4.32 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் இருளர் குடியிருப்பு கட்டுமான பணிகள். அதே ஊராட்சியில், மக்களைத் தேடி மருத்துவ திட்டம். அடர் நடவு மரக்கன்றுகளுக்கு, சொட்டு நீர் பாசன கருவி அமைக்கும் முறை.
மருதம் ஊராட்சியில், இயற்கை உரம் பயன்படுத்தி சாகுபடி செய்யப்படும் எலுமிச்சை நடவு பண்ணை. புத்தகரம் ஊராட்சியில், 5.91 லட்ச ரூபாய் செலவில் கட்டி வரும் பள்ளி கழிப்பறை கட்டடம் மற்றும் மருதம் கிராமத்தில், 4.15 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சாலைஆகியவற்றை பார்வையிட்டனர்.
ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் கவிதா, உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.