கோவை வேளாண் பல்கலையில் நடந்த பொங்கல் விழாவில், பல்கலை துணைவேந்தர் கீதா லட்சுமி பங்கேற்று, பொங்கல் பண்டிகை குறித்து விளக்கிப் பேசினார். அப்போது, 'அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்' என்றார்.
விழாவில் பங்கேற்ற ஒருவர், 'தை, 1 தமிழ் புத்தாண்டு என, முந்தைய, தி.மு.க., ஆட்சியில் போட்ட அரசாணையை, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்தார்... அதனால் இதுவரை ஏப்., 14ல், தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லி வந்த அதிகாரிகள், இப்ப ஆட்சி மாறியதால், பொங்கலுடன் சேர்த்து, தமிழ் புத்தாண்டு வாழ்த்தையும் மறக்காம சொல்றாங்க...' என, முணுமுணுத்தார்.
அதற்கு மற்றொருவர், 'பாம்பு தின்னும் ஊருக்கு போனா, நடு துண்டு நமக்குன்னு சொல்றது தானே புத்திசாலித்தனம்...' என, 'கமென்ட்' அடிக்க, அனைவரும் கமுக்கமாக சிரித்தனர்.