விருதுநகர்:விருதுநகர் மாணவியர் யோகாவில் தேசிய போட்டியில் வென்று சர்வதேச அளவிலான காமன்வெல்த் போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.
டில்லியில் நடந்த தேசிய அளவிலான யோகா போட்டியில் 23 மாநிலங்களில் இருந்து 120 பள்ளிகளை சேர்ந்த 1,570 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் விருதுநகர் பி.எஸ்.சிதம்பர நாடார் ஆங்கில பள்ளி மாணவியர் ஜே.ரதி, ஏ.ஜனனி, ஏ.கே.ஹர்ஷநிவேதா, வி.பி.சவுமியா, ஜி.ருக்சனா, வெள்ளி பதக்கம் வென்றனர்.
இவர்கள் சர்வதேச காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். மாணவியரை பள்ளிச் செயலர் பொன்ராஜன், முதல்வர் சாந்தி, யோகா ஆசிரியர் இந்திரா பாராட்டினார்.