கமுதி:கூடுதல் பஸ் வசதி இல்லாததால், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தனியார் பஸ் கூரையில் ஏறி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
முதுகுளத்துாரில் இருந்து பேரையூர், கருங்குளம், கோட்டை மேடு வழியாக கமுதிக்கு நேற்று காலை தனியார் பஸ் வந்தது.
இந்த வழித்தடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் அரசு பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் ஆபத்தான முறையில் தனியார் பஸ் கூரையில் ஏறியும், படிக்கட்டுகளில் தொங்கியும் ஆபத்தான பயணம் செய்தனர்.
இது போல, விதிமுறைகளை மீறி பஸ்சில் அளவுக்கு அதிகமாக பயணியரை ஏற்றிச் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை போலீசாரும், போக்குவரத்து அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.
மாணவர்கள் கூறுகையில், 'கிராமங்களில் இருந்து நகர் பகுதி பள்ளி, கல்லுாரிக்கு செல்ல குறிப்பிட்ட நேரத்தில் அரசு பஸ் வசதி இல்லை. இதனால் வேறு வழியின்றி இவ்வழியே வரும் வானங்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் அவல நிலை உள்ளது' என்றனர்.