காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், ராஜாஜி மார்க்கெட் தெற்கு பக்கம் நுழைவாயில் அருகில் குறுகிய இடத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு வந்ததால், அப்பகுதியில் உள்ள பழம் மற்றும் பூக்கடைகளால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
போக்குரவத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து, ராஜாஜி மார்க்கெட் வடக்கு பகுதி நுழைவாயில் அருகில், மாநகராட்சி மீன் மற்றும் இறைச்சி விற்பனை கூடம் அருகில், ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த பழக்கடைகள் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டது.
அந்த இடத்தில், பேருந்துகள் நிறுத்துமிடம்' என அறிவிப்பு பலகை மட்டுமே வைக்கப்பட்டு, பயணியர் நிழற்குடை அமைக்காததால், அந்த இடத்தில், பேருந்துகள் நிற்காமல், பழைய இடத்திலேயே நின்று வந்தன. இந்நிலையில், மாநகராட்சி சார்பில், புதிய பேருந்து நிறுத்தத்தில் பயணியர் வசதிக்காக நிழற்குடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.