திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் துணை தாசில்தார் ஒன்பது பேர் பணி நியமனம் மற்றும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்; நான்கு பேர் பணியிறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், நீதித்துறை பயிற்சி முடித்த துணை தாசில்தார்களுக்கு பணியிடம் வழங்கி கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார். அவ்வகையில், கலெக்டர் அலுவலக வரவேற்பு துணை தாசில்தாராக சரவணன், தாராபுரம் மண்டல துணை தாசில்தார் -- 2, சந்திரசேகர்.
கலெக்டர் அலுவலக 'உ' பிரிவு தலைமை உதவியாளராக பாண்டிஸ்வரி, பல்லடம் வட்ட வழங்கல் அலுவலராக மயில்சாமி, திருப்பூர் வடக்கு தலைமையிடத்து துணை தாசில்தாராக கவுரிசங்கர், ஊத்துக்குளி வட்ட வழங்கல் அலுவலராக தமிழேஸ்வரன் நியமிக்கப் பட்டுள்ளனர்.
ஊத்துக்குளி வட்ட வழங்கல் அலுவலர் மாறன், திருப்பூர் நிலம் எடுப்பு மற்றும் மேலாண்மை அலகு (நெடுஞ்சாலை) துணை தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக 'உ' பிரிவு தலைமை உதவியாளர் புஷ்பராஜன், வடக்கு மண்டல துணை தாசில்தாராகவும், வடக்கு தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், தெற்கு வட்ட வழங்கல் அலுவலராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் தெற்கு தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் தினேஷ்குமாருக்கு, பணியிட மாறுதல் உத்தரவு தனியே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 பேர் பணியிறக்கம்
திருப்பூர் மாவட்டத்தில், நான்கு பெண் துணை தாசில்தார்களை, முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணி இறக்கம் செய்து, டி.ஆர்.ஓ., ஜெய்பீம் உத்தர விட்டுள்ளார். அவர்கள், முதுநிலை வருவாய் ஆய்வாளரக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நிலம் எடுப்பு மற்றும் மேலாண்மை (நெடுஞ்சாலை) துணை தாசில்தார் சாந்தி, வடக்கு தாலுகா அலுவலகத்துக்கும், உடுமலை தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார் - 2 வளர்மதி, அதே அலுவலகத்திலும், ஊத்துக்குளி தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார் வசந்தா, கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்), வடக்கு தலைமையிடத்து துணை தாசில்தார் மகேஸ்வரி, அவிநாசிக்கும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
பணியிட மாறுதல் மற்றும் பணி நியமன உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள பணி நியமனங்கள் தொடர்பாக எவ்வித கோரிக்கைகள், மேல்முறையீடுகளும் ஏற்றுக்கொள்ளப்படாது.
மாற்றுப்பணியிடம் கேட்டு மனு அளித்தாலோ அல்லது மாறுதலை தவிர்க்கும் வகையில் விடுப்பு கேட்டு மனு அளித்தாலோ, பணி இடத்தில் சேர தவறினால், குடிமை பணிகள் விதிப்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.