மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் வட்டார கல்வி அலுவலகம் சார்பில், 1 முதல் 18 வயது உடைய மாற்றுத் திறனாளி மாணவ -- மாணவியருக்கு, செங்கல்பட்டு புனித கொலம்பியா மேல்நிலைப் பள்ளியில், இலவச மருத்துவ முகாம் இன்று நடக்கிறது.
இந்த முகாமில், மருத்துவச் சான்றிதழ் வழங்குதல், உதவித்தொகைக்கு பதிவு செய்தல், உதவி உபகரணங்களுக்கு பதிவு செய்தல், குழந்தைகள் நல மருத்துவம், முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவைச் சிகிச்சைக்கான பதிவு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளன.
முகாமில் பங்கேற்கும் மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் தலா இரண்டு வண்ண நகல் பிரதிகளுடன், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் எடுத்து வர வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு, காட்டாங்கொளத்துார் வட்டாரக் கல்வி அலுவலர், சார்லஸ் பீட்டர்: 94448 11462 மற்றும் மேற்பார்வையாளர், தேவேந்திரன்: 80725 94625 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.