திருப்போரூர்:தமிழக அரசு, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கிராமங்களைத் தேர்வு செய்து, அப்பகுதியில், விவசாய மேம்பாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
அவ்வகையில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில், கரும்பாக்கம், செம்பாக்கம், மடையத்துார், ஆமூர், கொட்டமேடு, கோவளம், முட்டுக்காடு உள்ளிட்ட 13 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மேற்கண்ட கிராமங்களில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.
இதற்கான ஒருங்கிணைந்த சிறப்பு முகாம், கரும்பாக்கம் கிராமத்தில் நேற்று நடந்தது. முகாமில், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இத்திட்டத்தின் மூலம், துறை சார்ந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து விளக்கினர்.