செங்கல்பட்டு:பாலுார் அடுத்த மேலச்சேரி கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமி, கடந்த நவ., 27ம் தேதி, வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் மகன் செல்வராஜ், 22, என்பவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட செல்வராஜ் மீது, குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு, மாவட்ட எஸ்.பி., பிரதீப் பரிந்துரை செய்தார். இதையேற்று, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் ராகுல்நாத், நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
அதன்பின், மாவட்ட சிறையில் உள்ள செல்வராஜிடம், குண்டர் சட்ட நகலை, இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார், நேற்று வழங்கி, புழல் சிறையில் அடைத்தனர்.
மாவட்டத்தில், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது இதுவே முதல் முறையாகும்.