அச்சிறுபாக்கம்:தொழுப்பேடு- - ஒரத்தி சாலையோரம், கடமலைப்புத்துார் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதியில், செல்லியம்மன் கோவில் குட்டை உள்ளது. அதில் மழை நீர் தேங்கி, 'பிளாஸ்டிக்', குப்பைக் கழிவுகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கொசுக்கள் உற்பத்தி ஆகும் இடமாகவும் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய, ஊராட்சி நிர்வாகத்தினர், குட்டையை துாய்மைப்படுத்தி சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.