பல்லடம்:உடுமலையை சேர்ந்தவர் கார்த்திக், 30; தனியார் ஊழியர். மனைவி கோகிலா, 26. நிறைமாத கர்ப்பிணியான கோகிலாவுக்கு, நேற்று முன் தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. உடுமலை, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு அழைத்து வரப்பட்டார்.
பல்லடம் - -உடுமலை ரோடு, வடுகபாளையம் அருகே, கோகிலாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது.
இதனால், ஆம்புலன்ஸ் டிரைவர் பழனி குமார் உதவியுடன், டெக்னீஷியன் ஷோபனா, கோகிலாவுக்கு சிகிச்சை வழங்கினார். இதையடுத்து, ஆம்புலன்சிலேயே கோகிலாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. தாய், சேய் இருவரும் பத்திரமாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Advertisement