திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த வெள்ளப்பந்தல் ஏரிக்கரை பகுதியில், நேற்று முன்தினம், மனித எலும்புக்கூடுகள் சிதறி கிடந்தன. முன்பு புதைக்கப்பட்டு, நாய் கிளறியதால் தற்போது வெளிப்பட்டது.
திருக்கழுக்குன்றம் போலீசார், அவற்றை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பினர். ஆய்வில் வாலிப வயது ஆணின் எலும்புகள் என தெரிந்தது. அவர், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதி, போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், காட்டூர் பகுதியில், இருளர் ஒருவர் வேறொருவர் மனைவியுடன் வசித்ததும், பின் அப்பேண்ணும் இவரை கைவிட்டு, மற்றொருவருடன் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன்பின் அவரை அப்பகுதியில் காணவில்லை. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம், சந்தேகத்தின்பேரில் விசாரித்து வருகின்றனர்.