சென்னை, மங்களூரில் நடந்த, 'அகில இந்திய பால் பேட்மின்டன்' போட்டியில், எஸ்.ஆர்.எம்., முதலிடத்தையும், அண்ணா பல்கலை நான்காமிடத்தையும் பிடித்தன.
பல்கலைகளுக்கு இடையிலான அகில இந்திய பால் பேட்மின்டன் போட்டி, கர்நாடக மாநிலம், மங்களூர் பல்கலையில் கடந்த 14ல் துவங்கி, சமீபத்தில் நிறைவடைந்து.
இந்த போட்டியில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்கலை அணிகள் பங்கேற்றன.
போட்டிகள் 'லீக்' முறையில் நடத்தப்பட்டன. லீக் போட்டிகளில் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
முதல் போட்டியில் 35 - 35, 35 - 16 என்ற கணக்கில், கோவை பாரதியார் பல்கலையை வென்றது.
மற்றொரு போட்டியில், 35--16, 35 --26 கணக்கில், அண்ணா பல்கலையை வீழ்த்தியது. கடைசி லீக் போட்டியிலும் எஸ்.ஆர்.எம்., அணி, 23 - 35, 35 --33, 35 - 23 என்ற கணக்கில் மங்களூர் அணியை தோற்கடித்தது.
அனைத்து போட்டிகள் முடிவில், சென்னை எஸ்.ஆர்.எம்., முதலிடத்தையும், மங்களூர் பல்கலை இரண்டாம் இடத்தையும் வென்றன. மூன்றாம் இடத்தை ஆந்திரா பல்கலையும், நான்காமிடத்தை அண்ணா பல்கலையும் வென்றன.