சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள், இம்மாதம் இறுதியில் துவங்க உள்ளன.
இதில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என, ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
கபடி, சிலம்பம் உட்பட 42 வகைகளாக மாவட்ட போட்டிகளும், 50 வகைகளாக மண்டல போட்டிகளும் நடைபெற உள்ளன. இதற்கு பதிவு நடக்கிறது.
கிரிக்கெட்டும், முதல்வர் கோப்பை போட்டியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில், பள்ளி, கல்லுாரி மற்றும் பொதுப் பிரிவினர் என, 23ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
பங்கேற்க விரும்புவோர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என, மாவட்ட அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.