உடுமலை:மடத்துக்குளம் ஒன்றிய வட்டார வள மையம் சார்பில், பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம், சாளரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது.
மடத்துக்குளம் வட்டார கல்வி அலுவலர் அருள்முருகன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் சரவணன் முன்னிலை வகித்தார்.
ஊர்வலத்தில், கல்வியின் அவசியம், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்த விழிப்புணர்வு வாசகங்களுடன் மாணவர்கள் பங்கேற்றனர்.வட்டார வள மேற்பார்வையாளர் மகாலட்சுமி, பயிற்சியாளர் பிரபாகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.