உடுமலை:உழவு, அறுவடை பணிகளுக்கு டிராக்டருடன் இயங்கும் கருவி, நிலக்கடலை பறிக்கும் கருவி, சோளம் அறுவடை இயந்திரம், வைக்கோல் ரவுண்ட் பேலர், ரோட்டரி மல்சர், புல்டோசர், லாரியில் இயக்கப்படும் தேங்காய் பறிக்கும் இயந்திரம் உள்ளிட்ட கருவிகள், 50 சதவீத மானிய வாடகையில் வழங்கப்படுகிறது.
வேளாண் கருவிகள் வாடகைக்கு தேவைப்படும் விவசாயிகள், குறு, சிறு விவசாய சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவற்றை இ-வாடகை செயலி வாயிலாக முன்பதிவு செய்து, முன்பணம் செலுத்தவேண்டும். விவசாயிகள் செலுத்தும் வாடகை, பின்னேற்பு மானியத்தொகை, வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
கூடுதல் விபரங்களுக்கு, திருப்பூர் உதவி செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) சுப்பிரமணியத்தை, 99427 - 03222, தாராபுரம் உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரனை, 79040 - 87490; உடுமலை உதவி செயற்பொறியாளர் முத்துராமலிங்கத்தை, 98654 - 97731 என்கிற மொபைல் எண்களில் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.