சென்னை, 'மெட்ரோ ரயில்' நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 'மார்க்' மெட்ரோவுடன் இணைந்து தைத்திருநாளை தொடர்ந்து, வரும் 21, 22ம் தேதிகளில், மெட்ரோ இன்னிசை, பல்சுவை நிகழ்ச்சியை நடத்துகின்றன.
சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், 21ம் தேதி மாலை 6:00 மணிக்கு, இன்னிசை நிகழ்ச்சியும், 22ல் மாலை 6:00 மணிக்கு பல்சுவை இசை நிகழ்ச்சியும் நடக்கின்றன.
ஒரு நிகழ்ச்சிக்கு நுழைவு கட்டணம் 550 ரூபாய். இந்த தொகையை, மெட்ரோ ரயிலில் பயணிக்கும் அட்டையில் 'ரீசார்ஜ்' செய்து உபயோகித்து கொள்ளலாம். இந்த அட்டையில் 20 சதவீத கட்டணத் தள்ளுபடியும் உண்டு.
இந்த நுழைவுச்சீட்டு, பயண அட்டைகள், சென்ட்ரல் மெட்ரோ, கோயம்பேடு, திருமங்கலம், ஆயிரம் விளக்கு, ஆலந்துார், மற்றும் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள 'டிக்கெட் கவுன்டர்'களில் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.