கொடுங்கையூர், குடும்ப தகராறில், மனைவி, மாமனார், மைத்துனரை கத்தியால் வெட்டிய, ஆட்டோ ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
வியாசர்பாடி, இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் பரதன், 29; ஆட்டோ ஓட்டுனர். இவர் மனைவி தனலட்சுமி. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும், மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, பரதன், கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் மனைவி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பரதன், மனைவி தனலட்சுமி, 29, மாமனார் ராஜசேகர், 65, மைத்துனர் அப்புன்ராஜ், 29, ஆகியோரை, மீன் வெட்டும் கத்தியால் வெட்டி தப்பினார்.
காயமடைந்த மூவரும், சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வழக்கு பதிந்த கொடுங்கையூர் போலீசார், பரதனை கைது செய்தனர்.