திருப்பூர்:சாலை பாதுகாப்பு வார விழாவின் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவியருக்கு வட்டார அளவிலான கட்டுரை (சாலைப் பாதுகாப்பு), பேச்சு (தலை கவசம் உயிர்கவசம்), ஓவியம் (சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு), 'ஸ்லோகன்' எழுதும் போட்டி, நாடகம் நடித்தல் உட்பட திறனறி போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு மேற்கண்ட போட்டிகள் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி (வடக்கு), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி (பல்லடம்), என்.சி.பி., தாராபுரம் (தாராபுரம்), ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளி (உடுமலை) ஆகிய நான்கு பள்ளிகளில் வட்டார அளவில் நேற்று நடந்தது.
இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இன்று ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான போட்டி நடக்கிறது.