திருவொற்றியூர், மணலிபுதுநகரைச் சேர்ந்தவர், சுரேஷ், 45. திருவொற்றியூர், சடையங்குப்பத்தில் உள்ள, சரக்கு பெட்டக முனையத்தில், கூலி வேலை பார்த்தார்.
நேற்று முன்தினம் இரவு, கன்டெய்னர் பெட்டியை துாக்கும் கிரேன் கொக்கி திடீரென அறுந்து, சுரேஷ் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே உயிரிழந்தார்.
சாத்தாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.