அவிநாசி:சின்னேரிபாளையம் பகுதியில், 'மொபைல் டவர்' அமைக்க ஊர் மக்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
அவிநாசி அருகே சின்னேரிபாளையம் ஊராட்சி மக்கள், சின்னேரிபாளையம் மற்றும் பழங்கரை ஊராட்சி தலைவர்களுக்கு அனுப்பிய மனு:
அவிநாசி, ரங்கா நகர் பகுதி, பழங்கரை மற்றும் சின்னேரிபாளையம் ஊராட்சிக்கு உட்பட பகுதிகளாக உள்ளன. அங்குள்ள குடியிருப்பின் மேல் தளத்தில், 'மொபைல் போன் டவர்' அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. குடியிருப்பின் நடுவில் மொபைல் போன் டவர் அமைக்க வேண்டாம் என, குடியிருப்பு உரிமையாளரிடம் கூறியும், அவர் ஏற்க மறுக்கிறார். 'மொபைல் போன் டவர்' அமைப்பதால் எழும் கதிர் வீச்சால் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, மொபைல் போன் டவர் அமைக்க அனுமதி அளிக்க கூடாது.
இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.