உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே சொத்து கேட்டு தந்தையை தாக்கிய மகன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த ராமநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 56. இவரது மகன் முத்துகிருஷ்ணன், 25. இவர், சொத்தை பிரித்து தரக் கோரி தந்தை ராமமூர்த்தியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த நவ., 8ம் தேதி ராமமூர்த்தியை, முத்துகிருஷ்ணன் திட்டி, தாக்கி மிரட்டினார்.
புகாரின் பேரில் முத்துகிருஷ்ணன் மீது எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.