அவிநாசி:அத்திக்கடவு- - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதில், முதல் மற்றும் இரண்டாவது நீரேற்ற நிலையங்கள் அமைந்துள்ள பவானி காலிங்கராயன், நல்லகவுண்டம்பாளையம் பகுதிகளுக்கு இடையே குழாய் பதிக்கும் பணி முழுமையாக நிறைவடைந்தது. இப்பணிகளை பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பினர் மற்றும் 'எல் அண்ட் டி' நிறுவன பொறியாளர்கள் பார்வையிட்டனர்.