கொரட்டூர், சென்னை அம்பத்துார் அடுத்த கொரட்டூர், மத்திய நிழற்சாலையில் உள்ள, தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் தரைதள வீட்டில் விபசாரம் நடப்பதாக, ஆவடி மாநகர காவல் ஆணையரக, விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று மதியம், 2:00 மணியளவில் அங்கு சென்ற போலீசார், பாலியல் தொழிலில் ஈடுபடுத்த அடைத்து வைக்கப்பட்டிருந்த பெரம்பூரை சேர்ந்த இரண்டு இளம்பெண்களை மீட்டனர். அதையடுத்து, விபசார தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய, திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஷீஜா, 42, என்ற பெண்ணை கைது செய்தனர்.