லண்டனில் செயல்படும் 'தி எகானமிஸ்ட்' பத்திரிகை, 'ஆன்லைன்' வாயிலாக சுற்றுச்சூழல், பொருளாதாரம், கலாசாரம் போன்ற பல தலைப்புகள் சம்பந்தமாக, பள்ளி மாணவர்களுக்கு போட்டி நடத்தியது. இதில், தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம், ஸ்ரீ நடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி மாதங்கி, 'குளோகல் டிஸ்கஷன் மாணவர் விருது, ஸ்டாண்ட் பாயின்ட் விருது' பெற்றார். அவரை, இடமிருந்து வலம்: பள்ளியின் முதல்வர் ஆனந்தி மணி, முதன்மை முதல்வர் காயத்ரி ராமசந்திரன் ஆகியோர் பாராட்டினர்.