திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் ஏராளமான சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது.
திருக்கோவிலுார், தென்பெண்ணை ஆற்றில் நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கீழையூர், வீரட்டானேஸ்வரர், அரகண்டநல்லூர் அதுல்ய நாதேஸ்வரர், ஏரிக்கரை மூலை இரட்டை விநாயகர், வீரபாண்டி அதுல்யநாதேஸ்வரர் சுவாமிகள் நேற்று காலை ஊர்வலமாக சென்றனர்.
தீர்த்தவாரி, மகா தீபாராதனை முடிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.