ஆலந்துார், சாலை வார பாதுகாப்பு விழா, மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், ஒரு வாரம் நடந்தது. இதை முன்னிட்டு, இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
இதில், உரிமம், உரிமம் புதுப்பித்தல், ஆவண மாற்றம் செய்ய வந்தவர்கள் என, 120க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
மருத்துவ பரிசோதனையை, அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் மேற்கொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை, வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி, ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.