மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய இருவர் கைது 

Added : ஜன 19, 2023 | |
Advertisement
புதுவண்ணாரப்பேட்டை, புதுப்பேட்டை, நாகப்பன் தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார், 26; மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்.நேற்று முன்தினம் மதியம், அம்மணி அம்மன் தோட்டம், நான்காவது தெருவில், தன் ஊழியர்களுடன், கால்வாய் அடைப்பு எடுக்கும் பணியில் ஈடுபட்டார்.அப்போது, குடிபோதையில் அங்கு வந்த இருவர், சாலை நடுவே வாகனத்தை நிறுத்தி, அவருடன் தகராறில் ஈடுபட்டனர். வினோத்குமாரை கத்தியால்
 மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய இருவர் கைது 



புதுவண்ணாரப்பேட்டை,
புதுப்பேட்டை, நாகப்பன் தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார், 26; மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்.

நேற்று முன்தினம் மதியம், அம்மணி அம்மன் தோட்டம், நான்காவது தெருவில், தன் ஊழியர்களுடன், கால்வாய் அடைப்பு எடுக்கும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது, குடிபோதையில் அங்கு வந்த இருவர், சாலை நடுவே வாகனத்தை நிறுத்தி, அவருடன் தகராறில் ஈடுபட்டனர். வினோத்குமாரை கத்தியால் கையில் வெட்டி, இருவரும் தப்பினர்.

வழக்கு பதிந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், தாக்குதலில் தொடர்புடைய, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மோகன், 24, என்பவரை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

மற்றொரு நபரான, ஜீவா நகரைச் சேர்ந்த சதீஷ்குமார், 23, என்பவரை பொதுமக்கள் தாக்கியதில், தலையில் லேசான காயம் ஏற்பட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். சதீஷ்குமாரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X