திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சிக்கு வரி செலுத்தாமல் இருந்த 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
திண்டிவனம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி 14 கோடி ரூபாய் நிலுவையில் இருந்தது. இதில் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள வரி பாக்கியை வசூல் செய்வதற்காக, கமிஷனர் உத்தரவின் பேரில் வரி பாக்கி வைத்துள்ளவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்று, நகராட்சி மேலாளர் சந்திரா தலைமையில் வருவாய் ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்ட ஊழியர்கள், வரி பாக்கி வசூல் செய்வதற்காக சென்றனர். அப்போது, வரி செலுத்தாமல் இருந்த மயிலம் ரோட்டில் ஒரு கடை, கற்பகம்பாள் தெருவில் 2 கடைகள் மற்றும் செஞ்சி ரோட்டில் ஒரு கடை என நான்கு கடைகளுக்கு சீல் வைத்தனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.