விழுப்புரம் : தனியார் பஸ்சில் பெண்ணிடம் 2.05 லட்சம் ரூபாயை அபேஸ் செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த அயினம்பாளையம் பழைய காலனியைச் சேர்ந்தவர் அமாவாசை மனைவி கீதா, 38; திருவாமாத்துார் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மகளிர் குழுவின் முன்னாள் செயலாளர். இவர், கடந்த 11ம் தேதி குழு பணம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 200 ரூபாயை ேஹண்ட் பேக்கில் வைத்து விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் செலுத்த தனியார் பஸ்சில் வந்தார்.
விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு சிக்னலிலில் இறங்கி பார்த்தபோது, பேக்கில் இருந்த பணம் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் திருடு போனது தெரியவந்துது.
புகாரின்பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.