திருப்பூர்;வேங்கைவயல் சம்பவத்தைக் கண்டித்து திருப்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வேங்கைவயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் சில விஷமிகள் மனித கழிவுகளை கலந்து விட்டதாக கூறி, இதில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு வடக்கு மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் தலைமை வகித்தார். தொகுதி, மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட கட்சியினர் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட துணை செயலாளர் சத்யன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னதாக திருப்பூர் வடக்கு தொகுதி பொறுப்பாளர் மூர்த்தி, பல்லடம் பொறுப்பாளர் ரங்கசாமி உட்பட பலர் முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர் துரைவளவன், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் சத்தியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.