உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே வேன் மோதி பைக்கில் சென்ற கூலித் தொழிலாளி இறந்தார்.
உளுந்துார்பேட்டை அடுத்த கிளியூர் பகுதியை சேர்ந்தவர் அய்யனார், 46; கூலி தொழிலாளி. இவர், நேற்று பைக்கில் உளுந்துார்பேட்டையில் இருந்து கிளியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மாலை 5:00 மணியளவில் பாண்டூர் அருகே சென்றபோது, திருக்கோவிலுாரில் இருந்து கடம்பூர் நோக்கி சென்ற மகேந்திரா டூரிஸ்ட் வேன் பைக் மீது மோதியது.
பலத்த காயமடைந்த அய்யனார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விபத்து குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.