விழுப்புரம் : விழுப்புரம் மத்திய மாவட்ட காங்., கமிட்டி சார்பில் கவர்னரை பதவியில் இருந்து அகற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மத்திய மாவட்ட காங்., தலைவர் சீனிவாசகுமார் தலைமை தாங்கினார். அகில இந்திய காங்., உறுப்பினர் ராமமூர்த்தி, மாநிலச் செயலாளர் தயானந்தம், நகர தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், கவர்னரை கண்டித்து பேசினர்.
வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம், சிவா, ராஜ்குமார், நாராயணசாமி, இளைஞர் காங்., மாவட்ட தலைவர் ஸ்ரீராம் உட்பட பலர் பங்கேற்றனர்.
செஞ்சி
செஞ்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டார தலைவர் வழக்கறிஞர் சக்திவேல் தலைமை தாங்கினார். நகர தலைவர் சூரியமூர்த்தி முன்னிலை வகித்தார். மேல்மலையனுார் வட்டார தலைவர் முருகையன், மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் திருமால், மண்ணாங்கட்டி, ராஜா, விவசாய பிரிவு மாவட்ட தலைவர் ஜோலாதாஸ், வட்டாரத் தலைவர் அன்பு செழியன் உட்பட பலர் பங்கேற்றனர்.