அடையாறு, சென்னை, அடையாறு, காந்திநகர், நான்காவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முகிலன், 35. கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த, 13ம் தேதி மனைவியுடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றார்.
நேற்று முன்தினம் அடுக்குமாடி குடியிருப்பில் அவரது பூட்டிய வீட்டில் இருந்து புகை வெளியேறியது. அக்கம் பக்கத்தினர் முகிலனுக்கும், காவல், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் அரை மணிநேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், தன் நண்பரான நன்மங்கலத்தை சேர்ந்த ராஜ் என்பவரை, மொபைல் போன் வாயிலாக தொடர்பு கொண்டு, வீட்டு பீரோவில் உள்ள நகைகளை எடுத்து வைக்குமாறு முகிலன் கூறி உள்ளார். பீரோவில் இருந்த, 147 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, இலங்கையில் இருந்து சென்னை திரும்பிய முகிலன் அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.***