சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே நிலத்தில் மேய்ந்த பசு மாட்டை வெட்டிய நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
சங்கராபுரம் அடுத்த மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மனைவி நிரோஷா, 33; கூலி வேலை செய்யும் இவர்கள் இரண்டு கறவை மாடுகள் வளர்த்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் அதே ஊரை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது விவசாய நிலத்தில் நிரோஷாவின் மாடுகள் மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சாமிக்கண்ணு கத்தியால் மாடுகளை சரமாரியாக வெட்டினார்.
மாடுகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த நிரோஷா இது குறித்து சாமிக்கண்ணுவிடம் கேட்டார். அவரை சாமிக்கண்ணு ஆபாசமாக திட்டி, கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.