தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே விவசாயியை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
தியாகதுருகம் அடுத்த பல்லகச்சேரி காட்டு கொட்டகையை சேர்ந்தவர் கண்ணன் மகன் ராமசாமி, 45; விவசாயி. இவர், கடந்த 17ம் தேதி பல்லகச்சேரி ஊருக்குள் நடந்த பொங்கல் பண்டிகை திருவிழாவை காண குடும்பத்துடன் சென்றிருந்தார்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த செல்லதுரை மகன்கள் மணிகண்டன், 35; மாணிக்கம், 32; ஆகியோருடன் பிரச்னை ஏற்பட்டது.
அப்போது மணிகண்டன், மாணிக்கம், அஞ்சாமணி, ரங்கன் ஆகியோர் சேர்ந்து ராமசாமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், அவர்கள் நால்வர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.